பாஜக கைகளில் திமுக சென்றுவிட்டது - மாணிக்கம் தாகூர் விமர்சனம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு அதிர்ச்சி அளிப்பதாக மாணிக்கம் தாகூர் கூறினார்.
பாஜக கைகளில் திமுக சென்றுவிட்டது - மாணிக்கம் தாகூர் விமர்சனம்
Published on: 

தூத்துக்குடி,

காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசியதாவது;

பிரச்சனை ஏற்படுத்த..

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது. கார்த்திகை தீபம் புனிதமானது. நினைத்த நாளில் எல்லாம் ஏற்ற முடியாது. பாஜகவினருக்கு தமிழ்க்கடவுள் முருகன் குறித்து ஒன்றும் தெரியவில்லை. திருச்செந்தூர் சூரசம்ஹாரத்தை மாற்றி வேறு நாளில் வைக்க முடியுமா? இவர்களின் தேவையெல்லாம் திருப்பரங்குன்றம் மலையில் இருக்கும் தர்கா முன்னால் விளக்கு ஏற்றி பிரச்சனை ஏற்படுத்த வேண்டும். இன்று சனிக்கிழமை; யாராவது சனிக்கிழமை தீபம் ஏற்றுவார்களா? முருகனை வைத்து அரசியல் செய்ய ஆர்எஸ்எஸ், பாஜகவால் மட்டும் தான் முடியும்.

பாஜக கைகளில் திமுக

தொகுதி மறுவரையறையில் 50% என்பது எவ்வளவு பெரிய துரோகம் என பேசியவர்கள் திமுகவினர் தான். இப்போது கேட்டால் காங்கிரசுக்கு வழி காட்டியவர்கள் நாங்கள் தான் என்பார்கள். வழி காட்டிவிட்டு பாதியில் விட்டுச் சென்றுவிட்டார்கள். நாட்டுக்கு நல்லது இல்லை என சொல்லிவிட்டு கால ஓட்டத்தில் எடுத்த இந்த முடிவு வருத்தமளிக்கிறது. அண்ணன் ஸ்டாலினை இன்றும் மதிக்கிறேன். ஆனால் பாஜகவின் கைகளில் போய்விட்டார்கள் என கவலையாக இருக்கிறது.”

இவ்வாறு அவர் கூறினார்.

X