

விசிக துணைப்பொதுச்செயலாளரும் சமூக நீதித்துறை அமைச்சருமான வன்னி அரசு தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது: ஆரிய கடப்பாறை கொண்டு திராவிடக்கோட்டையை இடிப்பேன் என்று சொன்னவர் சீமான். இந்தியாவில் நடக்கிற யுத்தமே ஆரிய- திராவிட யுத்தம் தான் என வரலாற்று ஆய்வுகளோடு அம்பலப்படுத்தியவர் புரட்சியாளர் அம்பேத்கர். அதையே தமிழ்நாட்டில் பரப்புரை செய்தவர் தந்தை பெரியார்.அப்படிப்பட்ட பெரியாரையே ஒரு மண்ணு என இழிவுபடுத்தியவர் திரு.சீமான்.
திராவிடக்கோட்பாட்டையும்சனாதன எதிர்ப்பையும் அரசியல் படுத்தியவர் அண்ணாவும் கருணாநிதியும்.
அப்படிப்பட்ட கலைஞரை தெலுங்கன் என்றும் திருட்டு திமுக என்றும் மிக கேவலமாக,அநாகரீகமாக மேடைகளில் பிதற்றியவர்சீமான்.அதுமட்டுமல்ல, கலைஞர் அரசாணை பிறப்பித்த ஒரே காரணத்தால்,மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலை நிராகரித்த பார்ப்பனிய அடிமை தான் சீமான்..
இப்படி கோட்பாட்டு வழியிலும்தனிநபர் தாக்குதலிலும்ஈடுபட்ட பிழைப்புவாதி சீமானின் இழிவான அரசியலை திமுக மறந்திருக்கலாம். விடுதலைச் சிறுத்தைகளை பொறுத்தவரை தந்தை பெரியாரையும் புரட்சியாளர் அம்பேத்கரையும் ஏற்றுக்கொண்டவர்களை தான் ஏற்கும்.பார்ப்பனிய அடிமைகளை ஏற்காது.இப்போது திமுகவுக்கும் வெட்கமில்லை; நாதகவுக்கும் வெட்கமில்லை” என்று பதிவிட்டுள்ளார்.