

சென்னை,
தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுக இடம்பெற்றிருந்தது. 4 தொகுதிகளில் போட்டியிட்ட மதிமுக 2 தொகுதிகளில் வெற்றிபெற்றது.
இதனிடையே, தேர்தலுக்குப்பின் திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த பல்வேறு கட்சிகள் கூட்டணியில் இருந்து விலகின. மேலும், ஆட்சி அமைக்க தவெகவுக்கு ஆதரவு அளித்து அமைச்சரவையிலும் இடம்பெற்றுள்ளன.
அதேவேளை, தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த மதிமுக 2 தொகுதிகளில் வெற்றிபெற்றது. வெற்றிபெற்ற 2 தொகுதிகளிலும் மதிமுக உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட்டிருந்தது.
திமுக கூட்டணியில் தனிச்சின்னத்தில் போட்டியிட கட்சிகள் கூட்டணியை விட்டு விலகி தவெகவுக்கு ஆதரவு அளித்த நிலையில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மதிமுக தற்போதுவரை கூட்டணியில் நீடித்து வருகிறது. ஆனாலும், அவ்வபோது திமுகவுக்கு எதிரான கருத்துகளை மதிமுக தலைவர்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், திமுக ஒரு நச்சுப்பாம்பு என்று மதிமுக அவைத்தலைவர் அர்ஜுன்ராஜ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, பாம்புக்கு பால் வார்த்தாலும் நஞ்சை கக்கும். அதுபோல் திமுக ஒரு நச்சுப்பாம்பு. திமுகவினர் தில்லுமுல்லுக்கு சொந்தக்காரர்கள். அவர்களுடன் இருக்கக்கூடாது என்பதே அனைவரின் கருத்து. மதிமுகவை திமுக அழிக்க நினைக்கிறது. நல்லது செய்வதுபோல் தீங்கு செய்கிறது. தவெகவுடன் மதிமுக கூட்டை அமைக்கும் வரை தூரத்தில் இருந்து ரசிப்போம்’ என்றார்.