சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளைத் திசைதிருப்ப புலம்பெயர் தொழிலாளர்களைப் பலிகடாவாக்கும் திமுக - நயினார் நாகேந்திரன்

திமுக அரசு தனது கையாலாகாத்தனத்தை வடமாநிலத் தொழிலாளர்கள் மூலம் திசைதிருப்ப முயல்கிறது என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழகத்தில் கஞ்சா நடமாட்டம் அதிகரிக்க வடமாநிலத் தொழிலாளர்கள் தான் காரணம் என்று அமைச்சர் தோ.மோ. அன்பரசனும், பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி சோமுவும் பேசியிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.

Also Read
காந்தி என்ற பெயரே இருக்கக்கூடாது என்று பாஜக அரசு நினைக்கிறது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
கோப்புப்படம்

பிழைப்பைத் தேடிவரும் ஏழை எளிய புலம்பெயர் தொழிலாளர்களை, இது நாள்வரை "பானிபூரி விற்பவர்கள்" என்று குறிப்பிட்டு, அவர்களைக் கிண்டலடித்து வெறுப்பை விதைத்த திமுக, தற்போது ஒரு படி மேலே சென்று, அவர்களைக் கஞ்சா வியாபாரிகள் எனப் பழிசுமத்தியிருப்பது கொடூரமானது.

Also Read
இன்ஸ்டாகிராமில் பழகி அத்துமீறல்... இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய வாலிபர் கைது
கோப்புப்படம்

தனது திறனற்ற நிர்வாகத்தால் நேரும் கொடூர குற்றங்கள் தொடங்கி கஞ்சா விற்பனை வரை அனைத்திற்கும் அப்பாவி வடமாநிலத் தொழிலாளர்களைக் கைகாட்டி, ஓடி ஒளிந்து கொள்ள திமுக அரசு முயற்சிப்பது கேவலமானது! சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளைத் திசைதிருப்ப புலம்பெயர் தொழிலாளர்களைப் பலிகடாவாக்கும் திமுகவின் கேவலப்பட்ட தேர்தல் யுக்தி தமிழக மக்களிடையே என்றும் எடுபடாது! அராஜக திமுக அரசும் மீண்டும் ஆட்சி அரியணை ஏறாது! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Also Read
அறிவான் - சினிமா விமர்சனம்
கோப்புப்படம்

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com