காந்தி என்ற பெயரே இருக்கக்கூடாது என்று பாஜக அரசு நினைக்கிறது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

சகோதரர் கமல் நாடாளுமன்றத்தில் சிலரை புலம்ப வைத்துவிட்டார் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
காந்தி என்ற பெயரே இருக்கக்கூடாது என்று பாஜக அரசு நினைக்கிறது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
Published on

மதுரை,

மகாத்மா காந்தியின் பெருமைகளை நினைவுகூறும் வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் ஒருங்கிணைப்பில், கமல் பண்பாட்டு மையம் நடத்தும் "மறவோம் - REMEMBERING BAPUJI & BROTHERS" நிகழ்வு மதுரையில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

கமல் திரைப்படத்தில் ஒரு வசனம் பேசியிருப்பார், 'மறதி ஒரு தேசிய வியாதி' என்று. அதுபோல காந்தியடிகளையும் மக்கள் மறந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் காந்தியின் வாழ்க்கையில் பெரிய திருப்புமுனையை, மனமாற்றத்தை ஏற்படுத்திய மதுரை மண்ணில் 'மறவோம்' என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கிறார்.

வெறுப்பு அரசியலை மூர்க்கமாக திணிக்கும் ஒரு கட்சி ஒன்றியத்தில் ஆளும் காலத்தில், காந்தியத்தை நம் நாடு இறுகப்பற்றிக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தும் நிகழ்வுதான் இந்த நிகழ்வு. காந்தியை பிறரிடம் தேடாமல் நமக்குள் தேடுவோம். காந்தியடிகளை மக்களின் மனதில் இருந்து எப்படியாவது அகற்றிவிட வேண்டும் என்று ஒன்றிய பாஜக அரசு திட்டமிட்டு துடித்துக் கொண்டிருக்கிறது.

Also Read
இன்ஸ்டாகிராமில் பழகி அத்துமீறல்... இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய வாலிபர் கைது
காந்தி என்ற பெயரே இருக்கக்கூடாது என்று பாஜக அரசு நினைக்கிறது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

காந்திய கொள்கைகளை அழிக்க வேண்டும் என்ற நிலையில் இருந்து, காந்தி என்ற பெயரே இருக்கக்கூடாது என்ற இடத்துக்கு நகர்ந்திருக்கிறார்கள். அதற்கு எடுத்துக்காட்டுதான் 100 நாள் வேலைத்திட்டத்தில் இருந்து காந்தியடிகள் பெயரை நீக்கியது. அடுத்து கரன்சி நோட்டிலிருந்து காந்தி படத்தை எடுத்தாலும் எடுத்துவிடுவார்கள்.

என்னைப் பொறுத்த வரையில், ஒற்றைத்துவத்துக்கு எதிரானவர் காந்தி. இந்து - முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி. மத நல்லிணக்கத்துக்கான மகத்தான மந்திரம் காந்தி. இந்தியா அனைவருக்குமான நாடு என்ற கருத்தியல்தான் காந்தி. மதத்தை வைத்து அரசியல் செய்யும் அற்பர்களுக்கு காந்தி பிடிப்பதில்லை.

Also Read
ரூ.213.80 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மேம்பாலம் - மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
காந்தி என்ற பெயரே இருக்கக்கூடாது என்று பாஜக அரசு நினைக்கிறது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

கமல்ஹாசன் பேச்சு எங்களுக்கு புரியவில்லை என்று சிலர் சொல்வார்கள். அவர்களுக்கு புரியாமல் இல்லை. ஆனால் புரிந்து கொள்ளக்கூடாது என்று நினைக்கிறார்கள். மீடியா மைக்குகளுக்கு முன் புலம்பிக்கொண்டு இருந்தவர்களை நாடாளுமன்றத்தின் மைக்கிலும் சகோதரர் கமல் புலம்ப வைத்துவிட்டார்.

கமல்ஹாசன் தொடங்கிய மக்கள் நீதி மய்யம் 9-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் வேளையில், சமநீதிக்காகவும், சமூக நீதிக்காகவும் உங்கள் குரல் தொடர்ந்து ஒலிக்கட்டும் என்று வாழ்த்துகிறேன். 'அன்பின் பாதை சேர்ந்தவருக்கு முடிவே இல்லையடா' என்பது கமல்ஹாசனின் பாடல் வரிகள். அப்படி அன்பின் பாதையை வலியுறுத்திய காந்தியை மறவோம். வெல்வோம் ஒன்றாக. இவ்வாறு அவர் கூறினார்.

Also Read
திமுகவை சீண்டினால் தமிழ்நாடே பதிலடி கொடுக்கும்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
காந்தி என்ற பெயரே இருக்கக்கூடாது என்று பாஜக அரசு நினைக்கிறது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com