கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தை தே.மு.தி.க.வினர் முற்றுகை

கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தை தே.மு.தி.க.வினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தை தே.மு.தி.க.வினர் முற்றுகை
Published on

கோவில்பட்டி:

கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் அலுவலகம் முன்பு தே.மு.தி.க.வினர் பாண்டவர்மங்கலம் பஞ்சாயத்து ராஜீவ் நகர் பகுதி மக்களுடன் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். பாண்டவர்மங்கலம் பஞ்சாயத்து ராஜீவ்நகர் பகுதியில் வாறுகால், சாலை மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமை தாங்கினார்.

ஆாப்பாட்டத்தில் மாநில மகளிர் அணி துணை செயலாளர் வக்கீல் சுபப்பிரியா, மாவட்ட அவை தலைவர் கொம்பையா பாண்டியன், நகர செயலாளர் பாலமுருகன், செயற்குழு உறுப்பினர் பிரபாகரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம் முடிந்ததும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்லத்துரையை சந்தித்து மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக் கொண்ட அவர், சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து நிர்வாகத்துடன் பேசுவதாக உறுதி அளித்ததின்பேரில், கலைந்து சென்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com