தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவு; தேசிய கொடி போர்த்தப்பட்டு ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது

மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் மீது தேசிய கொடி போர்த்தப்பட்டு ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது.
தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவு; தேசிய கொடி போர்த்தப்பட்டு ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது
Published on

சென்னை,

சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள ராஜாஜி அரங்கில் மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. அவரது உடல் மீது தேசிய கொடி போர்த்தப்பட்டு உள்ளது. தொடர்ந்து ராணுவ மரியாதையும் வழங்கப்பட்டது.

அவரது உடல் வைக்கப்பட்டு உள்ள கண்ணாடி பேழை அருகே, தலைவர் கலைஞர் மறைந்தார் என்ற செய்தி இடம்பெற்ற இன்றைய முரசொலி நாளிதழ் வைக்கப்பட்டு உள்ளது.

நாளை மறுநாள் 77வது ஆண்டில் முரசொலி நாளிதழ் அடியெடுத்து வைக்க உள்ளது. இந்த நிலையில், மறைந்த கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த தொண்டர்கள் மற்றும் மக்கள் குவிந்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com