

சென்னை,
“வெறும் கொடியேந்தி நிற்பவர்களல்ல; கொள்கையேந்தி வாழ்பவர்கள்தான் தி.மு.க.வினர் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
“வெறும் கொடியேந்தி நிற்பவர்களல்ல; கொள்கையேந்தி வாழ்பவர்கள்தான் தி.மு.க.வினர்! அதற்கு எடுத்துக்காட்டாகத் திகழும் மதிப்பிற்குரிய காசியைச் சந்தித்தேன்.
தந்தை பெரியாரின் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு, முரசொலியைத் தனது அரசியல் பாடசாலையாக்கி, சாதி மறுப்புத் திருமணத்தை மனமுவந்து வரவேற்று, பெருமிதத்துடன் கொண்டாடிய அவரது கண்களில் கலைஞரின் சிரிப்பைக் கண்டேன்!
கொள்கைகள் என்பவை மேடைகளில் பேசுவதற்கு மட்டுமல்ல; வாழ்ந்து காட்டுவதற்கும் என்பதை உணர்த்தும் லட்சக்கணக்கான காசிகளைக் கொண்டது திராவிட முன்னேற்றக் கழகம்!
உழைப்பாலும் தியாகத்தாலும் கழகத்தை வளர்த்தெடுத்த இத்தகைய தொண்டர்களின் வாழ்விலிருந்து, கழகத் தலைவரான நான் உட்பட, தலைமை முதல் கடைக்கோடித் தொண்டர் வரை, மூத்த முன்னோடிகள் முதல் புதிதாகக் களம் காணும் இளைஞர்கள் வரை, அனைவரும் கற்றுக்கொள்ள ஏராளம் இருக்கிறது! அன்புநிறை காசியை வழியனுப்பிய பின்னும், அவருடனான உரையாடல் உள்ளத்தில் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.