தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை

முடியனூரில் DMK Membership Enrollment
தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை
Published on

தியாகதுருகம்

தியாகதுருகம் அருகே முடியனூர் கிராமத்தில் தியாகதுருகம் தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் இல்லம் தேடி உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு தியாகதுருகம் வடக்கு ஒன்றிய செயலாளர் கே.கே.அண்ணாதுரை தலைமை தாங்கினார். அவைத்தலைவர் சாமிதுரை, துணை செயலாளர் கணேசன், மாவட்ட பிரதிநிதி மடம்.பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முடியனூர் ஊராட்சி மன்ற தலைவர் சுப்பு.இளங்கோவன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கள்ளக்குறிச்சி மாவட்ட ஊராட்சிக்குழு தலைவரும், தி.மு.க. மாவட்ட துணை செயலாளருமான புவனேஸ்வரி பெருமாள் கலந்து கொண்டு இல்லம் தேடி உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார். இதையடுத்து முடியனூரில் ஒரே நாளில் 42 இளைஞர்கள், 23 பெண்கள் என மொத்தம் 75 பேர் தங்களை தி.மு.க.வில் உறுப்பினராக இணைத்துக் கொண்டனர். அவர்களுக்கு ஒன்றிய செயலாளர் கே.கே.அண்ணாதுரை சால்வை அணிவித்து வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் அய்யம்பிள்ளை, சண்முகம், கருப்பன், முருகன், தேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com