

கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கலெக்டர் புகார் அளித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி கலெக்டராக பணிற்றி வரும் பெண் கலெக்டருக்கு அம்மாவட்ட தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அருள் விக்னேஷ் தனது செல்போனில் இருந்து பெண் கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பாக தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது கலெக்டரின் கணவர் விழுப்புரம் சரக டிஐஜி மூலம் கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி. விசாரிக்க அறிவுறுத்தினார். அதேவேளை, தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாதிக்கப்பட்ட பெண் கலெக்டரும் புகார் அளித்தார்.
அதேவேளை, கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்ட நிலையில் இது தொடர்பாக சிறப்பு விசாரணை அதிகாரி திருப்பூர் எஸ்.பி. சிருஷ்டி சிங், கண்காணிப்பு அதிகாரியாக ஐஜி காமினியை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில், தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் பெண் கலெக்டருக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் கலெக்டரிடம் விசாரணை அதிகாரி சிருஷ்டி சிங் இன்று விசாரணை நடத்தினார். கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்ட பெண் கலெக்டரின் வீட்டிற்கு நேரில் சென்ற விசாரணை அதிகாரி சிருஷ்டி சிங் கலெக்டரிடம் விசாரணை நடத்தினார். கலெக்டரிடம் விசாரணை அதிகாரி சிருஷ்டி சிங் வாக்குமூலத்தை பதிவு செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.