அண்ணாமலை மீதான அவதூறு வழக்கை வாபஸ் பெற்றார் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு

அண்ணாமலை மீதான அவதூறு வழக்கை திமுக எம்.பி. டி.ஆர்.பாலு வாபஸ் பெற்றுள்ளார்.
அண்ணாமலை மீதான அவதூறு வழக்கை வாபஸ் பெற்றார் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு
Published on

சென்னை,

திமுக பைல்​ஸ்

பாஜக முன்​னாள் மாநில தலை​வ​ரான அண்​ணா​மலை ‘ திமுக பைல்​ஸ்’ என்ற பெயரில் திமுக அமைச்​சர்​கள் பலரது சொத்​துப்​பட்​டியல் குறித்த விவரங்​களை கடந்த 2023-ம் ஆண்டு ஏப்​ரல் மாதம் வெளி​யிட்டார். அதில் குறிப்​பாக திமுக எம்​.பி.​ டி.ஆர்​.​பாலு மற்​றும் அவரது மகன் டி.ஆர்​.பி.​ராஜா மற்​றும் அவர்​களின் குடும்​பத்​தினருக்​கு சொந்​த​மாக 21 நிறு​வனங்​கள் உள்​ள​தாக​வும் ரூ.10 ஆயிரம் கோடிக்கு மேல் சொத்​துகள் உள்​ள​தாக​வும் குறிப்​பிட்டிருந்​தார்.

அவதூறு வழக்கு

இது தனது பெயருக்கும், குடும்பத்தினர் பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகக் கூறி டி.ஆா். பாலு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அண்ணாமலைக்கு எதிராக அவதூறு வழக்கு தொடா்ந்தார். இந்த வழக்கு சென்னைப் பெருநகர சைதாப்பேட்டை 17- வது குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.

வழக்கு வாபஸ்

கடந்த 26-ம் தேதி நடந்த விசாரணையின்போது, டி.ஆர். பாலுவிடம், அண்ணாமலையே குறுக்கு விசாரணை நடத்தினார். இதனையடுத்து வழக்கு 30-ம் தேதிக்கு (அதாவது இன்று) தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அண்ணாமலைக்கு எதிரான அவதூறு வழக்கை டி.ஆர். பாலு திரும்பப் பெறுவதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com