திருச்சியில் இன்று திமுக நிர்வாகிகள் மாநில மாநாடு

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது.
திருச்சியில் இன்று திமுக நிர்வாகிகள் மாநில மாநாடு
Published on

திருச்சி,

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன.

பிரசாரம், பொதுக்கூட்டம், கூட்டணி, தொகுதி பங்கீடு, நலத்திட்டப்பணிகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை என பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. அதேவேளை, அதிமுக கூட்டணியில் தவெக இணையலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இந்த சூழ்நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்கத்தொடங்கியுள்ளது.

அந்த வகையில் திருச்சியில் இன்று திமுக நிர்வாகிகள் மாநில மாநாடு நடைபெற உள்ளது. 'மு.க.ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்’ என்ற தலைப்பில் திமுக நிர்வாகிகள் மாநில மாநாடு நடைபெற உள்ளது.

திருச்சி சிறுகனூரில் நடைபெறும் இம்மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி பேச உள்ளார். இந்த மாநாட்டில் சிறப்பு அறிவிப்புகள், முக்கிய வாக்குறுதிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநாட்டில் 10 லட்சம் திமுக நிர்வாகிகள் கலந்துகொள்வார்கள் என்று அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com