

சென்னை,
அன்று எரித்தவர்கள்... எதிர்த்தவர்கள்... இன்று ஆதரிக்கிறார்கள்! தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு திமுக தெரிவித்துள்ள ஆதரவு வரவேற்கத்தக்கது என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
மக்களாட்சியில் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் சமமான பிரதிநிதித்துவமும், சீரான வளர்ச்சியும் கிடைக்கவும், அரசின் நலத்திட்டங்கள் மக்களை சென்றடையவும் தொகுதி மறுவரையறை அவசியமானது என்பதை தாமதமாகவாவது திமுக உணர்ந்திருக்கிறது.
முன்பு இதே விவகாரத்தில் எதிர்ப்பு போராட்டங்களை முன்னெடுத்து, மசோதாவின் நகலை எரித்தவர்கள் இன்று ஆதரவு தெரிவிப்பது அவர்களின் அரசியல் நிலைப்பாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றத்தையே காட்டுகிறது!
மாநில நலன்களையும், தேசிய வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு எடுக்கப்படும் ஆக்கப்பூர்வமான முடிவுகளுக்கு அரசியல் வேறுபாடுகளை கடந்து ஆதரவு அளிப்பதே ஆரோக்கியமான ஜனநாயகம்!
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.