2026-ல் தவெகவிற்கும் திமுக தான் போட்டி - தவெக இணை பொதுச்செயலாளர் நிர்மல்குமார்

தவெக மட்டுமே மக்களுக்காக தெளிவாக போராடி கொண்டு இருப்பதாகவும் அதில் எந்த மாற்றமும் இல்லை என்று கூறினார்.
2026-ல் தவெகவிற்கும் திமுக தான் போட்டி - தவெக இணை பொதுச்செயலாளர் நிர்மல்குமார்
Published on

மதுரை,

சீமானுக்கு இரண்டு சதவீகித வாக்கு வங்கிகளே உள்ளது. கடந்த முறை தமிழக வெற்றி கழக தொண்டர்கள் பாதி பேர் வாக்களித்ததாலேயே அவர்கள் எட்டு சதவீகித வாக்குகளை வாங்கியதாக கூறினார். சீமான் எப்போதும் ஜெயிக்க மாட்டேன் என்று சொல்வார், மேலும் ஒரு சீட்டு கூட ஜெயிக்க மாட்டேன், எதுவுமே பண்ண மாட்டேன் என்று அரசியல் செய்வார்.

மேடை கிடைத்தால் யுடியூப்பர் போல் பேசி கொண்டே இருப்பதாகவும் தெரிவித்தார். தவெகவிற்கு மட்டும் தான் 40 சதவீதத்திற்கு மேல் வாக்கு வங்கி உள்ளது. திமுகவிற்கு தவெக தான் போட்டி எனவும் மற்றப்படி அதிமுகவால் சாதகம் தான் என்றும் நிர்மல்குமார் கூறினார்.

பாரதிய ஜனதா கட்சியின் ஒரு அணி பிரிவாகவே அதிமுக மாறியதாக கூறினார். மேலும் தவெக மட்டுமே மக்களுக்காக தெளிவாக போராடி கொண்டு இருப்பதாகவும் அதில் எந்த மாற்றமும் இல்லை என்றும் கூறினார்.

பியூஷ்கோயல்க்கு தமிழ் நாட்டை பற்றி என்ன தெரியும் என கேள்வி எழுப்பினார். தமிழ் நாட்டின் அரசியல் மோசமாக இருப்பதாகவும், அதிமுகவை இன்று வழி நடத்துவதே பியூஷ்கோயல் தான் யார் யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பதையே அவர் தான் முடிவு செய்கிறார்.

நேற்று மதுரையில் மனு தாக்கல் செய்யும் போது மராட்டிய முதல் மந்திரியை அழைத்து வந்து மனு தாக்கல் செய்தனர். மேலும் மராட்டிய முதல் மந்திரிக்கும் தமிழ் நாட்டிற்கும் என்ன சம்மந்தம் என புரியவில்லை என தெரிவித்தார்.

மக்களுக்கு ஒன்று சொல்லி கொள்கிறோம் உங்களுக்காக தான் இருப்போம் எந்த இடத்திலும் மக்களை விட்டு கொடுக்க மாட்டோம். தவெக எந்தவிதத்திலும் மக்களுக்காக செயல்படுவோம் என நிர்மல்குமார் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com