மருத்துவர்கள் தேவையின்றி ரெம்டெசிவிர் மருந்தை பரிந்துரைக்க வேண்டாம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மருத்துவர்கள் தேவையின்றி ரெம்டெசிவிர் மருந்தை பரிந்துரைக்க வேண்டாம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேட்டுக்கொண்டுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

கொரோனா தொற்றால் நுரையீரல் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் உயிரை காப்பாற்றுவதற்கு ரெம்டெசிவிர் மருந்து பயன்படுத்தப்படுகிறது.

இந்நிலையில் மருத்துவர்கள் தேவையின்றி ரெம்டெசிவிர் மருந்தை பரிந்துரைக்க வேண்டாம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், ரெம்டெசிவிர் மட்டுமே உயிர்காக்கும் என்ற நம்பிக்கையில் மருந்து வாங்க மக்கள் படையெடுத்து வருகின்றனர். ரெம்டெசிவிர் மருந்தை அவசர தேவை உள்ள நோயாளிகளுக்கு மட்டுமே மருந்துவர்கள் பரிந்துரைக்க வேண்டும். தேவையில்லாதோருக்கு பரிந்துரைக்க வேண்டாம். ரெம்டெசிவிர் விற்பனையை முறைப்படுத்த உயர் அலுவலர்களுடன் ஆய்வு செய்ய இருக்கிறோம். தேவையற்ற நிலையில் ரெம்டெசிவிர் மருந்துகளை எழுதிக் கொடுப்பதால் கூட்டம் கூடுவது நோய் பரவ வழிவகுக்கும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com