உதயநிதி ஸ்டாலினின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? - வேட்புமனுவில் வெளியான தகவல்

துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் 2-வது முறையாக போட்டியிட உள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 23-ம் தேதி நடைபெற உள்ளது. திமுக சார்பில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் 2-வது முறையாக போட்டியிட உள்ளார். இதற்கான வேட்புமனுவை இன்று அவர் தாக்கல் செய்தார். இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் அவரது சொத்து மதிப்பு விவரங்கள் வெளியாகி உள்ளன.

அதன்படி தனது கையில் ரொக்கமாக ரூ.50 ஆயிரமும், தனது மனைவியிடம் ரூ.75 ஆயிரமும் இருப்பதாக உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். தன்னிடம் இருக்கும் மொத்த அசையும் சொத்தின் மதிப்பு சுமார் ரூ.12.92 கோடி என்றும், தனது மனைவி கிருத்திகாவிடம் இருக்கும் அசையும் சொத்தின் மதிப்பு ரூ.13.25 கோடி என்றும் தெரிவித்துள்ளார்.

தன்னிடம் இருக்கும் அசையா சொத்தின் மதிப்பு ரூ.7.72 கோடி என்றும், சொந்தமாக தங்கம் எதுவும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தனது மனைவியிடம் சுமார் ரூ.1.88 கோடி மதிப்புள்ள 1,600 கிராம் பழைய தங்க நகைகள் இருப்பதாக கூறியுள்ளார்.

மேலும், தனக்கு சொந்தமாக ரூ.23 லட்சம் மதிப்பிலான ஒரு இனோவா காரும், ரூ.1 கோடி மதிப்பிலான டிபெண்டர் காரும் இருப்பதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவர் குறிப்பிட்டுள்ள டிபெண்டர் காரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பயன்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com