சைபர் குற்றவாளிகளிடம் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம்: திருநெல்வேலி எஸ்.பி. அறிவுறுத்தல்

அனைத்து சமூக வலைதளங்கள் மூலமாக தற்போது மதிப்பாய்வு பணி தொடர்பான மோசடிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது என திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.
சைபர் குற்றவாளிகளிடம் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம்: திருநெல்வேலி எஸ்.பி. அறிவுறுத்தல்
Published on

திருநெல்வேலி மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையின் செய்திக்குறிப்பு தொடர்பாக மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் கூறியிருப்பதாவது:

அனைத்து சமூக வலைதளங்கள் மூலமாக தற்போது 'review task fraud' (மதிப்பாய்வு பணி மோசடி) மோசடிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Telegram/WhatsApp வாயிலாக அறிமுகமில்லாத எண்களிலிருந்து வீட்டில் இருந்தபடியே மொபைல் போன் மூலமாக online part time job செய்து தினமும் சம்பாதிக்கலாம் என குறுஞ்செய்தி வரும் message-களுக்கு ஆசைப்பட்டு விருப்பம் தெரிவித்துவிட்டால் சில review task-களை கொடுத்து அதை செய்து முடித்ததும் அதற்காக ஒரு review task-ற்கு சில நூறு அல்லது ஆயிரம் ரூபாய் பணம் உங்கள் வங்கி கணக்கிற்கு அனுப்பி நம்பிக்கை ஏற்படுத்ததுவார்கள்.

உங்களை டெலிகிராம் அல்லது வாட்ஸப் மூலம் ஒருவர் தொடர்பு கொண்டு அவர்களது website-ல் சில task-களை செய்து முடித்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் எனக்கூறி முதலில் சில ஆயிரம் பணம் முதலீடு செய்ய வைத்து அதை விட கொஞ்சம் அதிக பணத்தை கொடுத்து நம்ப வைப்பார்கள். பின்னர் மேலும் ஆசை வார்த்தை கூறி உங்களை அதிகமான பணத்தை செலுத்த கூறி கட்டாயப்படுத்துவார்கள். அதிகமான பணத்தை முதலீடு செய்தவுடன் அதிக லாபம் கிடைத்து இருக்கிறது எனவும்; அந்த பணத்தை உடனே எடுக்க முடியாது எனக்கூறியும் இன்னும் சில task-களை செய்ய வைத்தும் மீண்டும் பணம் கட்டினால் தான் மேற்சொன்ன பணத்தை லாபத்தோடு பெற முடியம் என இக்கட்டான சூழ்நிலையை உருவாக்கிவிடுவார்கள்.

உங்களது சொந்த நிலத்தையோ, வீட்டையோ, நகையையோ அடமானம் வைத்தோ (அ) விற்றோ பணத்தை சைபர் குற்றவாளிகளிடம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்றும், எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது.

இது போன்ற சைபர் கிரைம் நடைபெற்றால் சைபர் கிரைம் இணையதளத்தில் www.cybercrime.gov.in மற்றும் 1930 என்ற Toll Free எண்ணிற்கு அழைத்து உடனடியாக உங்களுடைய புகாரினை பதிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com