எல்.பி.ஜி. சிலிண்டர் தட்டுப்பாடு வதந்திகளை நம்ப வேண்டாம்: தூத்துக்குடி கலெக்டர் தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து எண்ணெய் நிறுவனங்களிலும் வீட்டுத் தேவைக்கான சிலிண்டர்கள் போதிய அளவில் கையிருப்பில் உள்ளன என்று கலெக்டர் விஷூ மகாஜன் தெரிவித்துள்ளார்.
எல்.பி.ஜி. சிலிண்டர் தட்டுப்பாடு வதந்திகளை நம்ப வேண்டாம்: தூத்துக்குடி கலெக்டர் தகவல்
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் விஷூ மகாஜன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து எண்ணெய் நிறுவனங்களிலும் வீட்டுத் தேவைக்கான சிலிண்டர்கள் போதிய அளவில் கையிருப்பில் உள்ளன. விநியோகத்தில் எவ்வித தாமதமோ அல்லது குறைபாடோ இல்லை. எனவே பொதுமக்கள் அவசரகதியில் (Panic Booking) சிலிண்டர்களை முன்பதிவு செய்யத் தேவையில்லை.

எரிவாயு விநியோக நிறுவனங்கள் தங்களின் வழக்கமான பணிகளை தடையின்றி மேற்கொண்டு வருகின்றன. பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும். எரிவாயு விநியோகம் தொடர்பாக ஏதேனும் புகார்கள் அல்லது குறைகள் இருந்தால் பின்வரும் வழிகளில் தொடர்பு கொள்ளலாம்:

சம்பந்தப்பட்ட எரிவாயு நிறுவன அலுவலகங்கள்.

மாவட்ட வழங்கல் அலுவலக எண்: 0461-2341471.

இயற்கை எரிவாயு (PNG) இணைப்புக்கு அழைப்பு:

தூத்துக்குடி வட்டத்தில், குறிப்பாக முத்தையாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள், வணிக ரீதியிலான சிலிண்டர்களுக்கு மாற்றாக PNG (Piped Natural Gas) எனப்படும் குழாய் மூலம் வழங்கப்படும் இயற்கை எரிவாயு இணைப்பைப் பெற முன்வர வேண்டும். இதற்குரிய வழிமுறைகளில் விண்ணப்பித்து, கூடுதல் பலன்களைப் பெறலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com