ஆட்டுக்குட்டியால் சிரிப்பலை

ஆட்டுக்குட்டியால் சிரிப்பலை ஏற்பட்டது.
ஆட்டுக்குட்டியால் சிரிப்பலை
Published on

திருச்சி, அம்மா மண்டபம் படித்துறையில் வெள்ளம் ஏற்படும்போது மேற்கொள்ளப்படும் மீட்பு நடவடிக்கைகளின் ஒத்திகை பயிற்சி நேற்று நடந்தது. தண்ணீரில் தத்தளிக்கும் மிருகங்களை மீட்பது குறித்தும் அப்போது ஒத்திகை பார்க்கப்பட்டது. இதன் ஒருபகுதியாக தண்ணீரில் தத்தளிக்கும் ஆட்டுக்குட்டியை மீட்பது போன்று ஒத்திகைக்காக ஆட்டுக்குட்டி ஒன்று காவிரி ஆற்றில் தூக்கி வீசப்பட்டது. தண்ணீருக்குள் விழுந்த வேகத்தில் ஆட்டுக்குட்டி கரையை நோக்கி நீச்சல் அடிக்கத் தொடங்கியது. ரப்பர் படகில் இருந்து மீட்பு படையினர் நெருங்குவதற்குள் ஆட்டுக்குட்டி கரையை எட்டியது. இதனால் அந்த பகுதியில் சிறிதுநேரம் சிரிப்பலை எழுந்தது.. அந்த காட்சிகளை படத்தில் காணலாம்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com