டாக்டர் ராமதாஸ் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார்; மருத்துவமனை நிர்வாகம்


டாக்டர் ராமதாஸ் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார்; மருத்துவமனை நிர்வாகம்
x

ராமதாசுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

சென்னை

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சமீப காலமாக மாநாடு, பொதுக்கூட்டம் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை உள்ளிட்ட கட்சி தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகளில் தொடர்ச்சியாக பங்கேற்று வந்தார்.

இதனிடையே, டாக்டர் ராமதாஸ் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இதய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், அவருக்கு இன்று ஆஞ்சியோ பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. டாகடர் ராமதாஸ் தொடர்ந்து மருத்துவ குழுவினர் கண்காணிப்பில் உள்ளார்.

இந்நிலையில், டாக்டர் ராமதாஸ் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என்று அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில்,

வழக்கமான இதய பரிசோதனைக்காக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர் ஓரிரு நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story