ராணிப்பேட்டை: திரௌபதி அம்மன் திருக்கல்யாணம் கோலாகலம்

சோளிங்கர் அருகே திரௌபதி அம்மன் அர்ஜுனன் சுவாமிக்கு திருக்கல்யாண வைபவ விழா கோலாகலமாக நடைபெற்றது.
ராணிப்பேட்டை: திரௌபதி அம்மன் திருக்கல்யாணம் கோலாகலம்
Published on

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த சோமசமுத்திரம் கிராமத்தில் தீமிதி திருவிழா கொடியேற்றத்துடன் சில நாட்களுக்கு முன் வெகு விமரிசையாக தொடங்கியது.

இந்நிலையில் இன்று திரௌபதி அம்மன் அர்ஜுனன் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. திருக்கோவிலில் திரௌபதி அம்மனுக்கு சிறப்பு பூஜை அபிஷேகம் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது. திரௌபதி அம்மன் அர்ஜுனன் சாமி மண்கோலத்தில் எழுந்தருளி காட்சி தந்தார்.பின் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து இரண்டு ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கினார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com