நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆதரவு

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திராவிடர் கழகம் நடத்தும் ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திராவிடர் கழகம்  ஆர்ப்பாட்டம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆதரவு
Published on

சென்னை,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைக்கும் நீட் தேர்வை தமிழகத்தில் முழுமையாக ரத்து செய்யவேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள் உள்பட பல்வேறு ஜனநாயக அமைப்புகள் தொடர்ந்து போராடி வருகின்றன. சமீபத்தில் கூட இந்ததேர்வில் மிகப்பெரிய மோசடி நடைபெற்று பல லட்சக்கணக்கான மாணவர்கள் கடும் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்தநிலையில், நீட் தேர்வை இந்தியா முழுவதம் ரத்து செய்யவேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிற 16-ந்தேதி திராவிடர் கழகத்தின் ஒருங்கிணைப்பில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு ஆதரவு தெரிவிப்பதுடன், மாவட்டங்களில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com