தியேட்டரில் ஆடைக்கட்டுப்பாடா..? லுங்கி அணிந்து சென்றால் அனுமதி மறுப்பு - தி.மலையில் பரபரப்பு

திருவண்ணாமலையில் லுங்கி அணிந்து வந்த இளைஞரை திரையரங்கிற்குள் அனுமதிக்காததால், அவருடன் வந்தவர்கள் திரையரங்கு மேலாளருடன் வாக்குவாதம் செய்தனர்.
தியேட்டரில் ஆடைக்கட்டுப்பாடா..? லுங்கி அணிந்து சென்றால் அனுமதி மறுப்பு - தி.மலையில் பரபரப்பு
Published on

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டம், மங்கலம் கிராமத்தில் லுங்கி அணிந்து வந்த இளைஞரை திரையரங்கிற்குள் அனுமதிக்காததால், அவருடன் வந்தவர்கள் திரையரங்கு மேலாளருடன் வாக்குவாதம் செய்தனர்.

அந்த திரையரங்கிற்கு வந்த 11 இளைஞர்களில், ஒருவர் லுங்கியுடன் வந்ததால், அவரை திரையரங்கு ஊழியர்கள் உள்ளே அனுமதிக்கவில்லை. இதனால், திரையரங்கு ஊழியர்களிடம் இளைஞர்கள் வாக்குவாதம் செய்ததால், திரையரங்கு மேலாளர், மங்கலம் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், வாக்குவாதம் செய்த இளைஞர்களை திரையரங்கில் இருந்து வெளியேற்றினர். இதனால் 11 பேரும் படம் பார்க்காமல் திரும்பிச் சென்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com