அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் முன் பாய்ந்து டிரைவர் தற்கொலை

மகன் தற்கொலை செய்த அதே இடத்தில் உயிரை மாய்த்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் முன் பாய்ந்து டிரைவர் தற்கொலை
Published on

நெல்லை,

நெல்லை அருகே உள்ள முன்னீர்பள்ளம் மருதம்நகர் ரெயில்வே தண்டவாளத்தில் நேற்று அதிகாலை ஆண் ஒருவரின் உடல் கிடந்தது. நாகர்கோவில் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையில் பிணமாக கிடந்தவர் முன்னீர்பள்ளம் மருதம்நகரை சேர்ந்த ஜெயசீலன் (வயது 59) என்பது தெரியவந்தது. லாரி டிரைவரான இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். இவரது 2-வது மகன் சதீஷ். இவர் பாளையங்கோட்டையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மருதம்நகர் ரெயில்வே தண்டவாளம் பகுதியில் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். அதன்பின்னர் சொந்த ஊருக்கு வந்த ஜெயசீலன் தனது மகன் உயிர்இழந்ததை நினைத்து தினமும் மனமுடைந்து காணப்பட்டார்.

நேற்று காலையில் மருதம்நகர் ரெயில்வே தண்டவாளத்திற்கு அருகே உள்ள தோட்டத்திற்கு செல்வதாக கூறிவிட்டு வெளியே வந்த அவர் அந்த வழியாக சென்னையில் இருந்து நெல்லை வழியாக கொல்லம் செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். அவரது மகன் தற்கொலை செய்த அதே இடத்தில் உயிரை மாய்த்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com