விஷம் குடித்து டிரைவர் தற்கொலை

பழனி அருகே விஷம் குடித்து டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.
விஷம் குடித்து டிரைவர் தற்கொலை
Published on

பழனி அருகே உள்ள நெய்க்காரப்பட்டி கே.வேலூரை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 54). வேன் டிரைவர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக இவருக்கு உடல்நிலை பாதிப்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர் நேற்று, தன் வீட்டில் வைத்து அரளி விதையை (விஷம்) அரைத்து குடித்து மயங்கி கிடந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பழனி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பெரியசாமி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பழனி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com