சுங்குவார்சத்திரம் அருகே லாரி மோதி டிரைவர் பலி

சுங்குவார்சத்திரம் அருகே லாரி மோதி டிரைவர் பலியானார்.
சுங்குவார்சத்திரம் அருகே லாரி மோதி டிரைவர் பலி
Published on

லாரி மோதியது

திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 35). தனியார் பஸ் டிரைவராக வேலை செய்து வந்தார். இவர் நேற்று சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பஸ்சை ஓட்டி சென்றார். சுங்குவார்சத்திரம் அருகே சந்தவேலுர் என்னும் இடத்தில் பஸ் நிறுத்ததில் பயணிகள் இறங்கும் போது, டிரைவர் ராஜேஷ் வலது புறமாக சாலையில் இறங்கி உள்ளார். அப்போது மின்னல் வேகத்தில் வந்த லாரி ராஜேஷ் மீது பயங்கரமாக மோதியது.

சாவு

இதில் பலத்த காயம் அடைந்த ராஜேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த சுங்குவார்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பரந்தாமன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com