மோட்டார்சைக்கிள் மீது பஸ் மோதி டிரைவர் பலி

வந்தவாசி அருகே மோட்டார்சைக்கிள் மீது பஸ் மோதி டிரைவர் பரிதாபமாக இறந்தார்.
மோட்டார்சைக்கிள் மீது பஸ் மோதி டிரைவர் பலி
Published on

வந்தவாசி

வந்தவாசியை அடுத்த வீரம்பாக்கம் எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 37). இவர் அரசு போக்குவரத்து கழக வந்தவாசி பணிமனையில் டிரைவராக பணிபுரிந்து வந்தார்.

இவர் தனது மனைவி மற்றும் பிறந்து 4 நாட்களே ஆன ஆண் குழந்தையை பார்ப்பதற்காக விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த ஞானோதயம் கிராமத்தில் உள்ள மாமியார் வீட்டுக்கு நேற்று முன்தினம் இரவு மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

வந்தவாசி -சேத்துப்பட்டு நெடுஞ்சாலையில், ஆராசூர் கூட்டுச்சாலை அருகே செல்லும்போது எதிரே போளூரில் இருந்து வந்தவாசி நோக்கி சென்ற அரசு பஸ் மேட்டார்சைக்கிள் மீது மோதியது.

இதில் படுகாயமடைந்த பாஸ்கரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த வந்தவாசி வடக்கு போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com