டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை

விக்கிரமசிங்கபுரத்தில் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

விக்கிரமசிங்கபுரம்:

விக்கிரமசிங்கபுரம் கீழ கடைசி தெரு அம்பலவாணபுரத்தை சேர்ந்தவர் பொன்னையா மகன் சொக்கலிங்கம் (வயது 47). டிரைவரான இவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு சரிவர வேலைக்கு செல்லாமல் மன உளைச்சலில் இருந்தாராம். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்ததும் விக்கிரமசிங்கபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். சொக்கலிங்கத்தின் உடலை கைப்பற்றி அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com