செல்போன் பேசியபடி அரசுபஸ்சை இயக்கிய டிரைவர் பணியிடை நீக்கம்

தற்காலிக பணியிடை நீக்கம் செய்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக திருப்பூர் மண்டல மேலாளர் உத்தரவிட்டார்.
செல்போன் பேசியபடி அரசுபஸ்சை இயக்கிய டிரைவர் பணியிடை நீக்கம்
Published on

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூரில் இருந்து பெருமாநல்லூர், புதிய பஸ் நிலையம் வழியாக மத்திய பஸ் நிலையத்திற்கு 45டி என்ற அரசு பஸ் தினமும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்சில் குன்னத்தூர், பெருமாநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வேலை காரணமாகவும், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் என ஏராளமானோர் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்று முன்தினம் இந்த பஸ்சை டிரைவரான பல்லடம் பகுதியை சேர்ந்த தாமரைக்கண்ணன் (வயது 45) செல்போன் பேசிய படியும், இரு கைகளையும் ஸ்டியரிங்கில் இருந்து எடுத்துவிட்டு செல்போனுக்கு ஹெட்செட் மாட்டியபடி அஜாக்கிரதையாக பஸ்சை இயக்கி வந்துள்ளார். இதனை பஸ்சில் பயணம் செய்த பயணி ஒருவர் வீடியோவாக பதிவு செய்து சமூகவலைத்தளங்களில் பதிவு செய்தார். அஜாக்கிரதையாக செயல்பட்ட டிரைவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென பலர் தெரிவித்தனர்.

தொடர்ந்து வீடியோ காட்சிகள் தொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திருப்பூர் மண்டல அலுவலகம் சார்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில் பயணிகள் பஸ்சில் பயணம் செய்யும்போது அஜாக்கிரதையாக ஓட்டிய தாமரைக்கண்ணனை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக திருப்பூர் மண்டல மேலாளர் உத்தரவிட்டார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com