

ராணிப்பேட்டை,
ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் இன்று ஒரு நாளைக்கு டிரோன் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட கலெக்டர் சந்திரகலா அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு 29.05.2026 அன்று முக்கிய பிரமுகர் வருகை புரிய உள்ளதை முன்னிட்டு பாதுகாப்பு நடைமுறை வழிகாட்டுதலின்படி, ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் 'தற்காலிக சிவப்பு மண்டலம்" (Temporary Red Zone) என்று அறிவிக்கப்படுகிறது.
எனவே, முக்கிய பிரமுகர் வந்து இறங்கும் இடம் மற்றும் செல்லும் வழித்தடங்கள் ஆகிய இடங்களில் பட்டாசு வெடித்தல், காற்றில் பலூன்களைப் பறக்கவிடுதல் மற்றும் டிரோன்கள் மூலம் மலர்களைத் தூவுதல், படப்பிடிப்புச் செய்தல் ஆகியவை முற்றிலும் தடைசெய்யப்படுகிறது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் காவல்துறை, ஆயுதப்படைகள் மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள மத்திய/மாநில அரசு முகமைகள் தவிர எந்தவொரு தனிநபரோ, தனியார் நிறுவனமோ அல்லது அமைப்போ தகுந்த முன் அனுமதியின்றி எந்த வகையான டிரோன் (Drone), Civil Remotely Piloted Aircraft System (RPAS), Unmanned Arial Vehicle (UAV) 29.05.2026 அன்று ஒருநாள் மட்டும் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.