தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கும் குளங்கள்

தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கும் குளங்கள்
தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கும் குளங்கள்
Published on

மதுக்கூரில் தண்ணீர் இன்றி குளங்கள் வறண்டு கிடக்கின்றன.நிலத்தடி நீரை உயர்த்தித்தர கோரிக்கை விடுத்துள்ள னர்.

புதுக்குளம்

மதுக்கூர் நகர எல்லைக்குள் உள்ள குளங்களில் மிக முக்கியமானது சிவக்கொல்லையை சேர்ந்த புதுக்குளம். இது நகரத்தின் மையப்பகுதியில் இருப்பதால் நீர் ஆதாரத்திற்கு மிக முக்கியமாக விளங்கி வருகிறது. சில ஆண்டுகளாக அந்த குளத்திற்கு தண்ணீர் வருவதற்கு வழி இல்லாததால் தற்போது தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது.

மேலும் பள்ளிவாசல் குளம், அவையான்டிகுளம் ஆகிய குளங்களும் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. இதனால் அந்த பகுதி மக்கள், கால்நடைகள் தண்ணீர் இன்றி அவதியடைந்துள்ளனர்.

நிலத்தடி நீரை உயர்த்த வேண்டும்

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மதுக்கூரில் தண்ணீர் இன்றி காணப்படும் குளங்களில் நிலத்தடி நீரை உயர்த்தி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com