கனமழை பெய்து வருவதால்.. ஏற்காடு பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் வர வேண்டாம் - மாவட்ட கலெக்டர்

தமிழ்நாட்டில் மேலும் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் சுட்டிக்காட்டியுள்ளது.
கனமழை பெய்து வருவதால்.. ஏற்காடு பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் வர வேண்டாம் - மாவட்ட கலெக்டர்
Published on: 

சேலம்,

மிக கனமழை பெய்து வருவதால் ஏற்காடு மலைப்பகுதிக்கு வருவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று சேலம் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

புயல்

மத்திய கிழக்கு மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவாகி இருந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, நேற்று தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்தது. இது மேலும் வலுப்பெற்று இன்று (ஞாயிற்றுக்கிழமை) காற்றழுத்த தாழ்வு மண்டலம், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, புயலாக நாளை (திங்கட்கிழமை) உருவாகிறது.

வடகிழக்கு பருவமழை

இந்த புயல் தொடர்ந்து மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெற்று மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆந்திர கடலோரப் பகுதிக்கு அருகில் 28-ந்தேதி (புதன்கிழமை) காலை கரையை கடக்கக் கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதனிடையே தமிழ்நாட்டில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமாக இருந்து வருகிறது. குறிப்பாக, நீலகிரி, கொடைக்கானல் போன்ற மலைப் பகுதிகளில் மழை கொட்டி வருகிறது. இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது. இதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் மேலும் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஏற்காடு வர வேண்டாம்

இந்நிலையில் சேலம், ஏற்காடு மலைப்பகுதியில் இன்று மிக அதிக கனமழை பெய்து வருவதால் சுற்றுலா பயணிகள் ஏற்காடு வர வேண்டாம் என சேலம் கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார். உள்ளூர் மக்கள் மழை பெய்யும்போது வாகனங்களில் பாதுகாப்பாக பயணிக்க வேண்டும் எனவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com