தூத்துக்குடியில் தசரா திருவிழா சப்பர பவனி; மாவிளக்கு ஊர்வலம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

மேலூர் பத்திரகாளி அம்மன், முத்தாரம்மன், உச்சிமாகாளியம்மன், சண்முகபுரம் பத்திரகாளியம்மன் உள்ளிட்ட தூத்துக்குடி மாநகரில் உள்ள அம்மன் கோவில்களில் உள்ள சப்பரங்கள் பவனியாக வந்தன.
தூத்துக்குடியில் தசரா திருவிழா சப்பர பவனி; மாவிளக்கு ஊர்வலம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
Published on

தூத்துக்குடியில் உள்ள அம்மன் கேவில்களில் தசரா திருவிழா கடந்த கடந்த செப்டம்பர் 23ம் தேதி கெடியேற்றத்துடன் தெடங்கி 10 நாட்கள் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதைத் தெடர்ந்து தூத்துக்குடி மாநகர் மாவட்ட இந்து முன்னணி சார்பில் அனைத்து சப்பர பேரணி நேற்று மாலை நடந்தது. பேரணியில் கிராம தேவதை என அழைக்கப்படும் மேலூர் பத்திரகாளி அம்மன், முத்தாரம்மன், உச்சிமாகாளியம்மன், சண்முகபுரம் பத்திரகாளியம்மன் உள்ளிட்ட தூத்துக்குடி மாநகரில் உள்ள அம்மன் கோவில்களில் உள்ள சப்பரங்கள் பவனியாக வந்தன.

தொடர்ந்து 500க்கும் மேற்பட்ட பெண்கள் மாவிளக்கு ஏந்தியும் ஊர்வலமாக சென்றனர். இந்த பேரணி சிவன் கோவில் முன்பு வந்தடைந்தது. முன்னதாக வடபாகம் ஸ்ரீ சந்தன மாரியம்மன் கோவில் சப்பரத்திற்கு நாகர்கோவில் எம்.எல்.ஏ. எம்.ஆர்.காந்தி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி மண்டல மேலாளர் கௌதம், உதவி பொது மேலாளர் வசந்த், தலைமை மேலாளர் வீரமணி ஆகியோர் முன்னிலையில் அனைத்து அம்மன்களுக்கும் பன்னீர் அபிஷேகம் செய்து பட்டுசாத்தி எதிர்சேவை நிகழ்ச்சி நடந்தது.

சப்பர பேரணி முன்பாக மேளதாளம் முழங்க ஒயிலாட்டம், கரகாட்டம் மற்றும் சிலம்பம் உள்ளிட்ட வீர விளையாட்டுக்கள் விளையாடியபடி பக்தர்கள் ஊர்வலமாக வர அம்மன் ஆலயங்களின் இந்த சப்பர பேரணியை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர். இதில் சிறப்பாக அலங்காரம் செய்யப்பட்ட அனைத்து சப்பரங்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் சித்ராங்கன், ஓபிசி அணி மாநில துணைத்தலைவர் விவேகம் ரமேஷ், மண்டல தலைவர் ராஜேஷ்கனி, பொதுச் செயலாளர் சிவராமன், சப்பரபேரணி கமிட்டி ஒருங்கிணைப்பாளர் மாயக்கூத்தன், தலைவர் தனபாலன், செயலாளர் வன்னியராஜ், பொருளாளர் ஆதிநாதஆழ்வார், அமைப்பாளர் சிவகுமார், துணைத்தலைவர்கள் ராகவேந்திரா வேலுசாமி, குருசாமி, காளிராஜா, துணை பொருளாளர் சரவணகுமார், மாவிளக்கு கமிட்டி நிர்வாகிகள் கனகராஜ், பாலசேகர், கிருஷ்ணன், செல்லப்பா சங்கர்ராஜ், தங்கச் செல்வன், கோவில்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com