மின் நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம்

நெல்லையில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம் நடந்தது
மின் நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம்
Published on

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பாக நெல்லை மின் பகிர்மான வட்டத்துக்கு உட்பட்ட நெல்லை நகர்புற கோட்டத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் உள்ள மின்வினியோக செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடந்த இந்த முகாமில் நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி கலந்து கொண்டு தலைமை தாங்கினார். அவர் பொதுமக்கள் வழங்கிய புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க நெல்லை நகர்புற மின்வினியோக செயற்பொறியாளர் முத்துக்குட்டி மற்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த நிகழ்ச்சியில் நெல்லை நகர்புற கூட்டத்திற்கு உட்பட்ட அனைத்து மின் பொறியாளர்களும் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com