போகி கொண்டாட்டம் எதிரொலி.. சென்னையில் புகைமூட்டம் - வாகன ஓட்டிகள் சிரமம்

சென்னையில் பல்வேறு இடங்களில் அதிகாலை முதல் புகைமூட்டம் சூழ்ந்துள்ளது.
போகி கொண்டாட்டம் எதிரொலி.. சென்னையில் புகைமூட்டம் - வாகன ஓட்டிகள் சிரமம்
Published on

சென்னை,

நமது முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முன் வீட்டில் உள்ள இயற்கை சார்ந்த தேவையில்லா பொருட்களை எரித்து பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகி பண்டிகையினை கொண்டாடி வந்துள்ளனர். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான போகி பண்டிகை தமிழ்நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. பண்டிகையை முன்னிட்டு மக்கள் பழைய பயனற்ற பொருட்களை எரித்து போகி பண்டிகையை வரவேற்று வருகின்றனர்.

சென்னையின் பல்வேறு பகுதிகளில் போகி கொண்டாடி தைத்திருநாளை வரவேற்கும் பொருட்டு பழைய பயனற்ற பொருட்களை எரித்து போகி கொண்டாடி வருகின்றனர். போகி பண்டிகையை முன்னிட்டு மேளம் அடித்து சிறுவர்கள் உற்சாக கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் போகி பண்டிகை எதிரொலியாக, சென்னையில் பல்வேறு இடங்களில் அதிகாலை முதல் புகைமூட்டம் சூழ்ந்துள்ளது. பழைய பொருட்களை மக்கள் எரித்து வருவதால், பனியுடன் புகையும் கலந்து புகைமூட்டமாக உள்ளது. கடும் புகை மூட்டம் காணப்படுவதால், சென்னையில் வாகன ஓட்டிகள் சிரமத்துடன் வாகனங்களை இயக்கி வருகின்றனர். மேலும், புகைமூட்டம் எதிரொலியாக, சென்னை விமான நிலையத்தில் விமானங்களின் புறப்பாடு மற்றும் வருகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com