

சென்னை,
அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமியின் உறவுக்கார பெண் மேனகா இன்று தவெகவில் இணைந்தார்
தமிழக சட்டசபை தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றிய தவெக, காங்கிரஸ், விசிக போன்ற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. முதல்-அமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார்.
இதனிடையே, தேர்தலில் தவெக வெற்றிபெற்ற நிலையில் திமுக, அதிமுக உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், தொண்டர்கள் என பலரும் தவெகவில் இணைந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமானவர் எடப்பாடி பழனிசாமி. இவரது உறவுக்கார பெண்ணான தொழிலதிபர் மேனகா இன்று தவெகவில் இணைந்தார்.
தவெகவில் இணைந்த மேனகாவை கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் கட்சி துண்டு அணிவித்து வரவேற்றார்.