

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:
காவி சிந்தனையில் எடப்பாடி பழனிச்சாமி.
உயர்ந்த சிந்தனைகளை உலகிற்கு அளித்த திருவள்ளுவரை ஒரு குறிப்பிட்ட மதத்துடன் இணைக்கும் வகையில் காவி உடை அணிவித்து எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்ததற்கு வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க.வுடன் இணைந்தவுடன் அவரின் சிந்தனை காவி மயமாகி விட்டது என்பதற்கு இது ஒரு உதாரணமாகும். திருவள்ளுவர் எந்த ஒரு மதத்திற்கும், சாதிக்கும், அரசியல் கோட்பாட்டிற்கும் கட்டுப்பட்டவர் அல்ல. அவர் மனிதர்களுக்குள் சமத்துவத்தையும், ஒற்றுமையையும் வலியுறுத்தியவர்.
திருவள்ளுவரின் உருவப் படத்திற்கு ஒரு குறிப்பிட்ட சாயலை ஏற்படுத்துவது தமிழர் பண்பாட்டு மரபுக்கு எதிரான செயல் ஆகும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.