பிரதமர் மோடியை இன்று சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி

புதுச்சேரி, மதுரையில் நாளை நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

மதுரை,

தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் தேர்தல் பிரசார கூட்டம் மதுராந்தகத்தில் ஜனவரி மாதம் நடைபெற்றது. தற்போது 2-வது கட்டமாக நாளை (மார்ச் 1) புதுச்சேரி, மதுரை என 2 இடங்களில் நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

Also Read
பெண் துணை தாசில்தாரை திருமணம் செய்த வியாபாரி ஆணவக் கொலை
கோப்புப்படம்

இதற்காக இன்று இரவு டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் பிரதமர் மோடி சென்னை வருகிறார். இந்த நிலையில் பிரதமர் மோடியை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று இரவு 8.30 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மரியாதை நிமித்தமாக பிரதமர் மோடியை, எடப்பாடி பழனிசாமி சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது.

Also Read
திமுக அரசின் அலட்சியத்தால் நெல் கொள்முதல் நிலையங்களில் லட்சக்கணக்கில் மூட்டைகள் தேக்கம்: அன்புமணி கண்டனம்
கோப்புப்படம்
X

Daily Thanthi
www.dailythanthi.com