எடப்பாடி பழனிசாமி ஆகஸ்ட் 1ம்தேதி தூத்துக்குடி வருகை: பனிமய மாதா ஆலயத்தில் வழிபாடு செய்கிறார்

2026 சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு 'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்கிற நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக எடப்பாடி பழனிசாமி ஆகஸ்ட் 1ம்தேதி தூத்துக்குடிக்கு வருகை தருகிறார்.
2026ம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு 'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்கிற நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடியார் வருகிற ஆகஸ்ட் 1ம்தேதி தூத்துக்குடிக்கு வருகை தருகிறார். மேலும் அவர் பனிமய மாதா கோவிலுக்கு அழைத்து சென்று வழிபட உள்ளார்.
இதையொட்டி அதிமுக வர்த்தகஅணி செயலாளர் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன், பனிமய மாதா பங்குத்தந்தை ஸ்டார்வினை மரியாதை நிமித்தமாக சந்தித்து, எடப்பாடியார் வரும் தகவலை தெரிவித்த பின்னர் ஆசிகள் பெற்றார். அப்போது பங்கு தந்தை அன்னையை வழிபட வருமாறு, மாநில வர்த்தக அணி செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் மூலம் இ.பி.எஸ்.சிற்கு அழைப்பு விடுத்தார்.
இந்த நிகழ்ச்சியின் போது பேராலய மேய்ப்புப் பணிக்குழுவின் செயலாளர், முன்னாள் மத்திய கூட்டுறவு பண்டகசாலை தலைவர் எட்வின் பாண்டியன், மாவட்ட துணைச் செயலாளர் செரினா பாக்யராஜ், வடக்கு மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் ஜீவா பாண்டியன், மீனவரணி துணை தலைவர் டெலஸ்பர், அண்ணா தொழிற்சங்க மாவட்ட துணைச் செயலாளர் ரயில்வே மாரியப்பன், முன்னாள் நகர் மன்ற தலைவர், விசைப்படகு உரிமையாளர் சங்க தலைவர் மனோஜ், மீனவரணி செயலாளர், மீனவர் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் அகஸ்டின் உட்பட பலர் உடனிருந்தனர்.






