பெண் போலீசை பலாத்காரம் செய்ய முயன்ற ஏட்டு...

ஈரோட்டில் ரெயில்வே பெண் போலீசை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற ஏட்டு கைது செய்யப்பட்டார்.
பெண் போலீசை பலாத்காரம் செய்ய முயன்ற ஏட்டு...
Published on

ஈரோடு,

ஈரோடு பழைய ரெயில் நிலையம் பகுதியை சேர்ந்தவர் செல்வன் (வயது 32). போலீஸ் ஏட்டான இவர் சேலம் புறநகர் துணை போலீஸ் சூப்பிரண்டின் ஜீப் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஈரோடு ரெயில்வே போலீசாக பணி புரிந்து வருகிறார். இதனால் செல்வன் ஈரோட்டுக்கு அடிக்கடி வந்து செல்வார். அப்போது ஈரோட்டில் வசிக்கும் 29 வயதான ஒரு பெண் போலீசுடன் செல்வன் நட்புடன் பழகி வந்து உள்ளார்.

அந்த பெண் போலீஸ் ஏற்கனவே திருமணம் முடிந்து கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

இந்தநிலையில் சம்பவத்தன்று இரவு செல்வன் அந்த பெண் போலீஸ் வீட்டுக்கு சென்று உள்ளார். அங்கு தனியாக இருந்த அவரை அவர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. அவரது பிடியில் இருந்து தப்பி வெளியே ஓடோடி வந்த பெண் போலீஸ், உதவி கேட்டு அக்கம்பக்கத்தினரை நாடி உள்ளார்.

இதுகுறித்து அந்த பெண் போலீஸ் கொடுத்த புகாரின்பேரில் ஈரோடு சூரம்பட்டி போலீசார் விசாரணை நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து செல்வன் மீது வீட்டுக்குள் அத்துமீறி நுழைதல், கொலை மிரட்டல் விடுத்தல், பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சி செய்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com