முட்டை கொள்முதல் விலை 30 காசுகள் குறைந்தது

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 30 காசுகள் குறைந்தது.
முட்டை கொள்முதல் விலை 30 காசுகள் குறைந்தது
Published on

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 450 காசுகளாக இருந்து வந்தது. இந்தநிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அதன் விலையை 30 காசுகள் குறைக்க முடிவு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து முட்டை கொள்முதல் விலை 420 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது. இதுகுறித்து கோழிப்பண்ணையாளர்கள் கூறுகையில், வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் வட மாநிலங்களில் முட்டை நுகர்வு மற்றும் விலை குறைந்து வருகிறது. மேலும் பிற மண்டலங்களிலும் முட்டை கொள்முதல் விலையை குறைத்து வருகின்றனர். அதன் காரணமாக நாமக்கல் மண்டலத்திலும் முட்டை விலை குறைக்கப்பட்டு உள்ளது என்றனர்.

இதனிடையே நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.92-க்கும், முட்டைக்கோழி கிலோ ரூ.67-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. அவற்றின் விலைகளில் மாற்றம் ஏதும் இல்லை என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com