முட்டை கொள்முதல் விலை 20 காசுகள் குறைந்தது

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 20 காசுகள் குறைந்தது.
முட்டை கொள்முதல் விலை 20 காசுகள் குறைந்தது
Published on

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 420 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அதன் விலையை 20 காசுகள் குறைக்க முடிவு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து முட்டை கொள்முதல் விலை 400 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது.

வட மாநிலங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து இருப்பதால் முட்டை விலை குறைந்து வருவதாகவும், அதன் காரணமாக நாமக்கல் உள்பட பல்வேறு மண்டலங்களிலும் முட்டை விலை குறைக்கப்படுவதாகவும் பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

இதனிடையே நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.92-க்கும், முட்டைக்கோழி கிலோ ரூ.72-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. அவற்றின் விலைகளில் மாற்றம் ஏதும் இல்லை என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com