நடிகை மீரா மிதுன் மீது பதிவு செய்யப்பட்ட 2 வழக்குகளில் ஜாமின் வழங்கியது எழும்பூர் நீதிமன்றம்

நடிகை மீரா மிதுன் மீது பதிவு செய்யப்பட்ட 2 வழக்குகளில் எழும்பூர் நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.
நடிகை மீரா மிதுன் மீது பதிவு செய்யப்பட்ட 2 வழக்குகளில் ஜாமின் வழங்கியது எழும்பூர் நீதிமன்றம்
Published on

சென்னை,

நடிகையும், மாடல் அழகியுமான மீரா மிதுன், சமூக வலைத்தளத்தில் பட்டியல் இன மக்களை அவதூறாக பேசிய வழக்கில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த மாதம் 14-ந்தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே அவர் மீது எழும்பூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பணியாற்றும் ஊழியரை ஆபாசமாக பேசி கொலைமிரட்டல் விடுத்தது தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது.

இந்நிலையில், நட்சத்திர விடுதி மேலாளரை மிரட்டியதாக எழும்பூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் எழும்பூர் நீதிமன்றத்தில் நடிகை மீரா மிதுன் இன்று ஆஜரானார்.

அப்போது தற்கொலைக்கு தூண்டும் வகையில் எழும்பூர் காவல்துறையினர் மனதளவில் டார்ச்சர் செய்வதாக நீதிபதியிடம் மீரா மிதுன் புகார் அளித்தார். அதனையடுத்து நடிகை மீரா மிதுன் மீது பதிவு செய்யப்பட்ட 2 வழக்குகளில் ஜாமின் வழங்கி எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மொத்தம் 4 வழக்குகளில் கைதான நிலையில் 2 வழக்குகளில் மீரா மிதுனுக்கு ஜாமீன் வழங்கியது எழும்பூர் நீதிமன்றம்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com