விஷம் குடித்து முதியவர் தற்கொலை

கருங்கல் அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
விஷம் குடித்து முதியவர் தற்கொலை
Published on

கருங்கல்:

கருங்கல் அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.

கருங்கல் அருகே உள்ள பூட்டேற்றி குமரச்சன்விளையை சேர்ந்தவர் பொன்னுபிள்ளை (வயது78). இவர் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்தார். நேற்று முன்தினம் பொன்னுபிள்ளை விஷம் குடித்து வீட்டில் வாந்தி எடுத்த நிலையில் காணப்பட்டார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடே அவரை மீட்டு சிகிச்சைக்காக கருங்கலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை பொன்னுபிள்ளை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது மனைவி தங்கரெத்தினம் கொடுத்த புகாரின் பேரில் கருங்கல் போலீசார் பொன்னுபிள்ளையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com