விஷம் குடித்து முதியவர் தற்கொலை

மது அருந்துவதை மனைவி கண்டித்ததால் விஷம் குடித்து முதியவர் தற்கொலை
விஷம் குடித்து முதியவர் தற்கொலை
Published on

மயிலாடுதுறை அருகே அருவாப்பாடி வை.பட்டவர்த்தி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது75). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி மல்லிகா (60). இவர்களுக்கு ஒரு மகளும் 2 மகன்களும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். ராஜேந்திரனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தது. இதை மல்லிகா கண்டித்தார். இதனால் மனமுடைந்த ராஜேந்திரன் மதுவில் பூச்சிக்கொல்லி மருந்தை கலந்து குடித்து விட்டு மயங்கி விழுந்தா. அவரை அவரது உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை ராஜேந்திரன் பரிதாபமாக இறந்தா. இது குறித்து மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com