ஸ்கூட்டர் மோதி முதியவர் சாவு

கீழ்பென்னாத்தூர் அருகே ஸ்கூட்டர் மோதி முதியவர் பரிதாபமாக இறந்தார்.
ஸ்கூட்டர் மோதி முதியவர் சாவு
Published on

கீழ்பென்னாத்தூர்

கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள சோமாசிபாடி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவா சின்னப்பையன் (வயது 70), கூலித் தொழிலாளி.

சம்பவத்தன்று கீழ்பென்னாத்தூர் அருகே திருவண்ணாமலை- திண்டிவனம் மெயின்ரோட்டில் சின்னப்பையன் நடந்து சென்றார். அப்போது பின்புறம் வேகமாக வந்த ஸ்கூட்டர் அவர் மீது மோதியது.

இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்சில் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து கீழ்பென்னாத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com