ஆவடி அருகே மின்சார வயர் அறுந்து விழுந்து உடல் கருகி முதியவர் உயிரிழப்பு

கண்ணையன் வேலைக்குச் செல்வதற்காக திருநின்றவூரில் பேருந்துக்காக காத்திருந்தார்.
உயிரிழப்பு
Published on: 

ஆவடி,

சென்னை ஆவடி அருகே திருநின்றவூரில் உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததில், மின்சாரம் பாய்ந்து முதியவர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.

பேருந்துக்காக காத்திருந்த முதியவர்

திருவள்ளூர் மாவட்டம், நசரத்பேட்டையைச் சேர்ந்தவர் கண்ணையன் (60). இவர் புலியூர் கிராமத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில், கண்ணையன் வேலைக்குச் செல்வதற்காக திருநின்றவூரில் பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அங்கிருந்த உயர் அழுத்த மின்கம்பி அறுந்து கண்ணையன் மீது விழுந்தது.

இதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்து தீப்பிடித்தது. இந்த விபத்தில் உடல் கருகிய கண்ணையன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பேருந்துக்காக காத்திருந்த முதியவர் மின்கம்பி அறுந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

X

Daily Thanthi
www.dailythanthi.com