பஸ் மோதி முதியவர் பலி

தேனியில் பஸ் மோதியதில் முதியவர் பலியானார்.
பஸ் மோதி முதியவர் பலி
Published on

தேனி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள பவளம் தெருவை சேர்ந்தவர் ஞானவேல் (வயது 84). இவர் நேற்று பழைய பஸ் நிலையம் அருகே மதுரை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த தனியார் பஸ் ஒன்று ஞானவேல் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை, அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஞானவேல் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஞானவேலின் மகன் சண்முகவேல் தேனி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், பஸ் டிரைவர் ராஜேந்திரன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com