தனியார் பஸ் மோதி முதியவர் பலி

வந்தவாசியில் தனியார் பஸ் மோதி முதியவர் பலி
தனியார் பஸ் மோதி முதியவர் பலி
Published on

வந்தவாசி

வந்தவாசி ராஜீவ்காந்தி தெருவில் உள்ள குடிசைமாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் தாமோதரன் (வயது 70).

இவர் சேத்துப்பட்டு சாலையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் வாகன உதவியாளராக பணிபுரிந்து வந்தார்.

இவரது மனைவி சீதா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

சம்பவத்தன்று மாலை பணிமுடிந்ததும் இவர் வழக்கம்போல் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். சீனிவாசா நகர் அருகில் வந்தபோது பின்னால் வந்த தனியார் பஸ் இவர் மீது மோதியது.

இதில் தலையில் பலத்த காயமடைந்த தாமோதரனை அந்த பகுதியில் இருந்தவர்கள் மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

பின்னர் தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனின்றி தாமோதரன் இறந்து விட்டார்.

இதுகுறித்து அவரது மகன் ராமச்சந்திரன் அளித்த புகாரின்பேரில் வந்தவாசி தெற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com