மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி முதியவர் பலி

ராணிப்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் முதியவர் பலியானார்.
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி முதியவர் பலி
Published on

ராணிப்பேட்டை, ஜூன்.6-

ராணிப்பேட்டை மாவட்டம், லாலாப்பேட்டை அருகே உள்ள கத்தாரிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் குமரவேலு (வயது 76). இவர் கத்தாரிகுப்பத்தில் இருந்து சொந்த வேலை காரணமாக ராணிப்பேட்டை நோக்கி மோட்டார் சைக்கிளில் எம்.பி.டி சாலையில் வந்து கொண்டிருந்தார். ராணிப்பேட்டை சிறுவர் சீர்திருத்தப்பள்ளி அருகே வரும்போது பின்னால் வந்த லாரி, குமரவேல் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் குமரவேலு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவலறிந்த ராணிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி வாலாஜா அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com